கிரிக்கெட் (Cricket)

வியக்க வைக்கும் வகையில் மாறிய சர்பராஸ் கான்..!

Published On 2025-08-16 14:18 IST   |   Update On 2025-08-16 14:18:00 IST
  • அதிக உடல் எடையுடன் காணப்பட்டதால், அணியில் இடம் பிடிக்க முடியாதல் நிலை ஏற்பட்டது.
  • தீவிர பயற்சியால் தற்போது உடல் எடையை குறைத்துள்ளார்.

ரஞ்சி கிரிக்கெட் போட்டி உள்ளிட்ட உள்ளூர் போட்டிகளில் அபாரமாக விளையாடி வருபவர் சர்பராஸ் கான். இவர் அதிக உடல் எடையுடன் காணப்பட்டதால் இவரால் எப்படி கிரிக்கெட் விளையாட முடியும் என்ற விமர்சனம் வைக்கப்பட்டது. ஆனால், அதைப்பற்றி கண்டு கொள்ளாமல் சிறப்பாக விளையாடி வந்தார்.

இந்திய அணியில் இடம்பெற முடியாததற்கு இவரது உடல் எடையும் ஒரு காரணம் என கூறப்பட்டது. ஆனால் திறமையான ஆட்டத்தால் இந்திய அணியில் கடந்த ஆண்டு இடம் பிடித்தார்.

6 போட்டிகளில் விளையாடி 371 ரன்கள் அடித்துள்ளார். இதில் ஒரு சதமும், 3 அரைசதங்களும் அடங்கும். 150 அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.

நியூசிலாந்து தொடர் முடிவடைந்து ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணியில் அவருக்கு விளையாட இடம் கிடைக்கவில்லை.

அதனைத் தொடர்ந்து சர்பரான் கான் தனது உடல் எடையை குறைக்க ஆரம்பித்தார். தீவிர முயற்சியால் தற்போது அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிட்டார்.

இனிமேல் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடினால், இந்திய அணியில் உறுதியாக இடம் கிடைக்கலாம் என நம்பலாம்.

Tags:    

Similar News