விளையாட்டு
ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன்: சாம்பியன் பட்டத்தை தவறவிட்ட #Lakshya sen
- முதல் கேம்-ஐ 15-21 என எளிதாக இழந்தார் லக்சயா சென்.
- 2-வது கேமில் கடுமையாக போராடி 20-22 என இழந்து ஏமாற்றம் அடைந்தார்.
ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் இறுதிச் சுற்றில் இந்தியாவின் லக்சயா சென்- தைவானின் லின் சுன்-யி-ஐ பலப்பரீட்சை நடத்தினார்.
முதல் கேமை லின் சு-யின் 21-15 என எளிதாக கைப்பற்றினார். 2-வது சுற்றில் லக்சயாக சென் கடும் நெருக்கடி கொடுத்தார். இதனால் 2-வது கேம் பரபரப்பாக சென்றது. என்றாலும் லின் சுன்-யி கடும் போராட்டத்திற்குப் பின் 22-20 என 2-வது கேம்-ஐ கைப்பற்றினார். அத்துடன் 2-0 என வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.
2-வது செட்டில் லக்சயாக சென் ஒரு கட்டத்தில் 11-8 என முன்னிலைப் பெற்றிருந்தார். அதன்பின் 14-14 என சமநிலை பெற்றார். பின்னர் 18-16 என முன்னிலைப் பெற்றிருந்தார். ஆனால் லின் 18-18 என சமநிலைப் பெற்றார்.
பின்னர் 20-22 என லக்சயா சென் தோல்வியடைந்தார்.