செய்திகள்
எம்எஸ் டோனி- மார்கன்

கொல்கத்தாவுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் இன்று மோதல்

Published On 2021-09-26 06:35 GMT   |   Update On 2021-09-26 06:35 GMT
பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சென்னை அணி சம பலத்துடன் இருப்பதால் இன்றைய ஆட்டத்திலும் வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இன்று 2 ஆட்டங்கள் நடக்கிறது. மாலை 3.30 மணிக்கு அபுதாபியில் நடக்கும் 38-வது லீக் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் - மார்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

சென்னை சூப்பர் கிங்ஸ் 9 ஆட்டத்தில் 7 வெற்றி, 2 தோல்வி பெற்று 14 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் பிளே-ஆப் சுற்றுக்குள் நுழைவதை கிட்டத்தட்ட உறுதி செய்துவிடும். சென்னை அணியின் ரன் ரேட் (+1.18) நன்றாக உள்ளது.

சென்னை அணியில் ருதுராஜ் கெய்க் வாட், டுபெலிசிஸ், அம்பதி ராயுடு ஆகியோர் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் தீபக் சாகர், பிராவோ ஆகியோர் முத்திரை பதித்து வருகின்றனர்.

சுரேஷ் ரெய்னா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சென்னை அணி சம பலத்துடன் இருப்பதால் இன்றைய ஆட்டத்திலும் வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொல்கத்தா அணி 9 ஆட்டத்தில் 4 வெற்றி, 5 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது. அந்த அணி 5-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டும் என்றால் கொல்கத்தா அடுத்துவரும் ஆட்டங்களில் வெற்றிபெற வேண்டியது கட்டாயமாகும். இதனால் அந்த அணி வெற்றிக்காக போராடும்.

கொல்கத்தா அணி பேட்டிங்கில் திரிபாதி, வெங்கடேஷ் அய்யர், சுப்மன்கில், நிதிஷ் ரானா ஆகியோர் உள்ளனர். பந்து வீச்சில் வருண் சக்கரவர்த்தி, ரசல், சுனில் நரேன் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

இரவு 7.30 மணிக்கு துபாயில் தொடங்கும் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரூ ராயல் சேலஞ்சர்ஸ்- ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

பெங்களூரூ அணி 10 புள்ளிகளுடன் (9 ஆட்டம்) 3-வது இடத்தில் உள்ளது. கடைசி 2 ஆட்டங்களில் தோல்வி அடைந்துள்ள அந்த அணி மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்ப முயற்சிக்கும். மும்பை அணி 9 ஆட்டத்தில் 4 வெற்றிபெற்று 8 புள்ளியுடன் 6-வது இடத்தில் உள்ளது.
Tags:    

Similar News