செய்திகள்
சுமித் நகல்

ஆண்கள் டென்னிஸ்: சுமார் இரண்டறை மணி நேரம் போராடி வெற்றி பெற்றார் சுமித் நகல்

Published On 2021-07-24 12:09 IST   |   Update On 2021-07-24 12:09:00 IST
ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்காக இந்தியா சார்பில் கடைசி வீரராக சென்ற சுமித் நகல், முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.
டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சுமித் நகல் உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த டெனிஸ் இஸ்டாமினை எதிர்கொண்டார். சுமித் நகல் முதல் செட்டை 6-4 என கைப்பற்றினார்.

2-வது செட்டிலும் சுமித் நகலே ஆதிக்கம் செலுத்தினார். 4-2 என முன்னிலையில் இருந்த நிலையில் 5-வது கேம்ஸை வெல்ல கடுமையாக போராட வேண்டியிருந்தது. இறுதியில் 5-வது கேம்ஸை கைப்பற்றி 5-2 என முன்னிலை பெற்றார்.  உஸ்பெகிஸ்தான் வீரரின் சர்வீஸை முறியடித்து கேம்ஸை கைப்பற்றினால் போட்டியில் வெற்றி (2-0) பெறலாம் என்ற நிலையில், சுமித் நகலால் கேம்ஸை கைப்பற்ற முடியவில்லை. இதனால் ஸ்கோர் 5-3 என ஆனது.

அடுத்து சுமித் நகல் சர்வீஸ் செய்தார். சுமித் நகல் சர்வீஸை உஸ்பெகிஸ்தான் வீரர் முறியடித்தார். இதனால் 5-4 என சுமித் நகலின் முன்னணி இடைவேளை குறைந்தது. உஸ்பெகிஸ்தான் வீரரின் அடுத்த சர்வீஸையும் சுமித் நகலால் முறியடிக்க முடியவில்லை. இதனால் செட் 5-5 சமன்பெற்றது.

அதன்பின் இருவரும் அவரவர்களுடைய சர்வீஸ் கேம்ஸ்களை கைப்பற்ற ஸ்கோர் 6-6 என சமநிலை பெற்றது. இதனால் டை-பிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் உஸ்பெகிஸ்தான் வீரர் 8-6 எனக்கைப்பற்றினார். ஆகவே 2-0 என வெற்றிபெறும் வாய்ப்பை சுமித் நகல் இழந்தார். இந்த சுற்றை கைப்பற்ற சுமித் நகல் 71 நிமிடங்கள் போராடினார்.

3-வது சுற்றில் இருவரும் மாறிமாறி புள்ளிகள் பெற்றனர்.  இறுதியில் சுமித் நகல் 6-4 என கைப்பற்றி உஸ்பெகிஸ்தான்  வீரரை வீழ்த்தினார். இந்த வெற்றியை பெற சுமித் நகலுக்கு 2 மணி நேரம் 34 நிமிடங்கள் தேவைப்பட்டன.

Similar News