செய்திகள்
டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் போட்டி

டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் போட்டியில் இந்தியா தோல்வி

Published On 2021-07-24 11:14 IST   |   Update On 2021-07-24 11:14:00 IST
ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் போட்டியில் விளையாடிய சரத் கமல் - மணிகா பத்ரா ஜோடி தோல்வியடைந்தது.
ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் போட்டியில்  உலக ரேங்கில் மூன்றாவது இடத்தில் உள்ள சீன தைபே ஜோடி இந்தியாவின் சரத் கமல் - மணிகா பத்ரா எதிர்த்து விளையாடியது.

போட்டியில் இந்திய ஜோடியான சரத் கமல் - மணிகா பத்ரா  சீன தைபே ஜோடிக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறியது.

ஏழு கேம்ஸ் கொண்ட போட்டியில்  8-11, 6-11, 5-11, 4-11 என தொடர்ந்து நான்கு கேம்ஸ்களையும் இழந்து அதிர்ச்சி தோல்வியடைந்தது.  இந்த ஆட்டம் மொத்தம் 27 நிமிடங்களே நீடித்தது.

இன்று மதியம் 12 மணியளவில்  பெண்கள் ஒற்றையர் போட்டியில் மணிகா பத்ரா, இங்கிலாந்து வீராங்கனையுடன் முதல் சுற்றுப்போட்டியில் மோத உள்ளார்.

Similar News