செய்திகள்
சுனில் கவாஸ்கர்

இவர்தான் நான் பார்த்திலேயே சிறந்த ஆல்-ரவுண்டர்: சுனில் கவாஸ்கர் சொல்கிறார்

Published On 2021-06-14 10:59 GMT   |   Update On 2021-06-14 10:59 GMT
கவாஸ்கர் கால்தில் கபில் தேவ், இம்ரான் கான், இயன் போத்தம், ரிச்சர்ட் ஹேட்லி போன்ற தலைசிறந்த ஆல்-ரவுண்டர்கள் விளையாடினர்.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் சுனில் கவாஸ்கர். டெஸ்ட் போட்டியில் 10 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றவர். வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து என அதிவேக ஆடுகளத்திலும் திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர்.

இவர், தான் பார்த்ததிலேயே சிறந்த வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் சர் கார்பீல்டு சோபர்ஸ் எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சுனில் கவாஸ்கர் கூறுகையில் ‘‘நான் பார்த்ததிலேயே சிறந்த ஆல்-ரவுண்டர் சர் கார்பீல்டு சோபர்ஸ்தான். ஏனென்றால் மிகவும் எளிமையாக பேட்டிங் மற்றும் பந்து வீச்சால் போட்டியின் தன்மையை மாற்றக் கூடியவர்.

நம்பமுடியாத வகையிலான கேட்ச்களை பிடித்தும் ஆட்டத்தின் போக்கை மாற்றக் கூடியவர். ஏராளான போட்டியில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சால் போட்டியின் தன்மையை மாற்றியுள்ளார். அதனால் நான் பார்த்ததில் சிறந்த ஆல்-ரவுண்டர் இவர்தான்.



வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக சென்னையில் 1978-ம் ஆண்டு நான் விளையாடிய டெஸ்ட் போட்டிக்கான ஆடுகளம்தான் மிகவும் கடினமானது. நான் விளையாடியதில் வேகப்பந்து வீச்சுக்கு மிகவும் சாதகமான ஆடுகளம். சபினா பார்க், பெர்த் போன்ற ஆடுகளத்தில் கூட விளையாடியுள்ளேன். சபினா பார்க்கில் பந்து பறக்கும். பெர்த்தில் பந்து பவுன்ஸ், கேரி இருந்தாலும் நான் விளையாடியிருக்கிறேன்.

சிட்னியில் மழை பெய்த பிறகு ஜெப் தாம்சனை எதிர்கொண்டுள்ளேன். ஆனால், சென்னையில் சில்வர்ஸ்டர் கிளார்க் பந்தை எதிர்கொள்ளும்போது, பந்துகள் என்னை சுற்றி பறந்தன. நான் விளையாடியதில் இதுதான் கடினமான ஆடுகளம் என நினைக்கிறேன்’’ என்றார்.
Tags:    

Similar News