செய்திகள்
சாஹல், ஹர்திக் பாண்ட்யா

ஹர்திக் பாண்ட்யா சிறந்த பாடகர்: சாஹல் சொல்கிறார்

Published On 2020-03-31 18:38 IST   |   Update On 2020-03-31 18:38:00 IST
இந்திய கிரிக்கெட் அணியில் சில சிறந்த பாடகர்கள் உள்ளனர் என்று சுழற்பந்து பந்து வீச்சாளர் சாஹல் நினைவு கூர்ந்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கிரிக்கெட் போட்டி நடைபெறவில்லை. இதனால் வீரர்கள் வீட்டில் முடங்கிக் கிடக்கின்றனர். அப்போது சமூக வலைத்தளங்கள் மூலமாக ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகின்றன. சில வீரர்கள் ஆன்லைன் லைவ் மூலம் ரசிகர்களுடன் உரையாடி வருகின்றனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான சாஹல் இன்ஸ்ட்கிராம் மூலம் பாலிவுட் பாடகர் ராகுல் வைத்யா உடன் லைவ் செசனில் கலந்து கொண்டார். அப்போது சாஹல் கூறுகையில் ‘‘இந்திய அணியில் சில பாடகர்கள் இருந்தனர். சுரேஷ் ரெய்னா மிகவும் சிறப்பாக பாடுவார். அப்புறம் மோகித் சர்மாவும் சிறப்பாக பாடுவார். தற்போது அணியில் உள்ள ஹர்திக் பாண்ட்யா மோசம் என்று கூற முடியாது. நன்றாக பாடுவார்.

நாம் கொரோனா வைரஸ் தொற்று குறித்து அதிக அளவில் பேசி வருகிறோம். ஆகவே மியூசிக் கற்றுக் கொள்வது, அதைப்பற்றி ஏன் பேசக்கூடாது உன நினை்கிறேன்’’ என்றார்.

Similar News