செய்திகள்
தரம்சாலா சென்றடைந்த இந்திய அணி வீரர்கள்

தரம்சாலா சென்றைடைந்த இந்திய அணி வீரர்கள்

Published On 2020-03-10 15:52 IST   |   Update On 2020-03-10 15:52:00 IST
தென்ஆப்பிரிக்கா அணிக்கெதிரான முதல் போட்டியில் விளையாடுவதற்காக இந்திய அணியைச் சேர்ந்த சில வீரர்கள் தரம்சலா சென்றடைந்துள்ளனர்.
தென்ஆப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இதற்காக தென்ஆப்பிரிக்கா அணி ஏற்கனவே இந்தியா வந்துவிட்டது.

முதல் ஆட்டம் 12-ந்தேதி இமாச்சல பிரதேசத்தில் உள்ள தரம்சாலாவில் நடக்கிறது. இதில் விளையாடுவதற்காக இந்திய அணி வீரர்கள் தரம்சாலா சென்ற வண்ணம் உள்ளனர்.

இந்திய அணியில் இடம் பிடித்துள்ள ஷுப்மான் கில், தவான், நவ்தீப் சைனி , குல்தீப் யாதவ் ஆகியோர் தரம்சாலா சென்றடைந்துள்ளனர். 

Similar News