செய்திகள்
காயம் அடைந்த நடுவர் ஷாம்சுதீன்

ரஞ்சி டிராபி இறுதி போட்டியில் தனி நபராக அம்பயர் பணியை கவனித்த பத்மநாபன்

Published On 2020-03-10 15:48 IST   |   Update On 2020-03-10 15:48:00 IST
ரஞ்சி டிராபி இறுதி போட்டியில் சக நடுவர் காயம் அடைந்ததால் ஆனந்த பத்பநாபன் தனிநபராக அம்பயர் பணியை தொடர்ந்தார்.
ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி ராஜ்கோட்டில் நேற்று தொடங்கியது. இதில் சவுராஷ்டிரா - பெங்கால் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. ஆன்-பீல்டு அம்பயர்களான ஆனந்த பத்பநாபன், ஷாம்சுதீன் ஆகியோர் பணியாற்றினர்.

நேற்றைய முதல் நாள் ஆட்டத்தின்போது பெங்கால் அணி வீரர் வீசிய பந்து லெக் அம்பயராக நின்ற ஷாம்சுதீன் வயிற்றுப் பகுதியை தாக்கியது. இதனால் அவர் உடனடியாக வெளியேறினார். இன்றும் அவர் அம்பயராக பணியாற்ற வரவில்லை.

அவருக்குப் பதில் தற்காலிகமாக பியூஷ் கக்கார் அம்பயராக பணியாற்றினார். ஆனால் இவர் லெக் அம்பயராக மட்டுமே செயல்பட்டார். இதனால் மற்றொரு அம்பயர் ஆன ஆனந்த பத்மநாபன் மெயின் அம்பயராக செயல்பட்டார்.

இன்று காலை அவருக்கு வயிற்றுப் பகுதியில் காயம் அதிகமாக இருந்ததால் அருகில் உள்ள மருத்துவமனையில் பரிசோதனைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். ஆகவே, இந்த போட்டியில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக மாற்று அம்பயர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

Similar News