செய்திகள்
கொரோனா பீதி: ரசிகர்கள் இல்லாமல் ஐபிஎல் போட்டிகள் நடக்காது- பிசிசிஐ அதிகாரி தகவல்
கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும், ஆனால் ரசிகர்கள் இல்லாமல் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படாது என பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதனால் பெரும்பாலான போட்டிகள் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் கால்பந்து லீக் ஆட்டங்கள் ரசிகர்கள் இல்லாமல் பூட்டிய மைதானத்திற்குள் நடைபெற்று வருகின்றன.
சில போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 45-க்கும் மேலாக அதிகரித்துள்ளது. இதனால் ஐபிஎல் போட்டிகள் தள்ளிப்போகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆனால் போட்டிகள் கட்டாயம் நடைபெறும் என பிசிசிஐ அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். ஒருவேளை மார்ச் 29-ந்தேதிக்குள் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வராவிடில் ரசிகர்கள் இல்லாமல் பூட்டிய மைதானத்திற்குள் போட்டி நடத்தப்படலாம் என்ற செய்தி உலா வந்தது.
ஆனால், அதற்கான வாய்ப்பு இல்லை என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அந்த அதிகாரி கூறுகையில் ‘‘எஃப்சி இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் பிளே-ஆஃப் சுற்றில் ஏடிகே-பெங்களூரு எஃப்சி அணிகள் மோதிய ஆட்டத்தை பார்த்தீர்கள் என்றால், கிட்டதட்ட 60 ஆயிரம் ரசிகர்கள் மைதானம் வந்து போட்டியை ரசித்தனர். ஆகவே, ஏன் ரசிர்கள் வந்து பார்ப்பதை தடுக்க வேண்டும்?’’ என்றார்.
ஆனால் வீரர்கள் ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொள்வது போன்ற நிகழ்வுகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படும் எனத் தெரிகிறது.