செய்திகள்
ராஸ் டெய்லர்

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் மூலம் அரிய சாதனை படைக்கிறார் ராஸ் டெய்லர்

Published On 2020-02-14 10:07 GMT   |   Update On 2020-02-14 10:07 GMT
மூன்று வகை கிரிக்கெட்டிலும் 100 போட்டிகளில் விளையாடிய ஒரே வீரர் என்ற அரிய சாதனையை படைக்க இருக்கிறார் ராஸ் டெய்லர்.
நியூசிலாந்து அணியின் அனுபவ வீரர் ராஸ் டெய்லர். 35 வயதாகும் இவர் 2006-ம் ஆண்டு மார்ச் 1-ந்தேதி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக நேப்பியரில் நடைபெற்ற ஒருநாள் போட்டி மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார்.

சுமார் 14 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வரும் அவருக்கு வெலிங்டனில் வருகிற 21-ந்தேதி தொடங்கும் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் 100-வது போட்டியாகும்.

இதன்மூலம் மூன்று வகை கிரிக்கெட்டிலும் 100 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற அரிய வகை சாதனையை படைக்க இருக்கிறார்.

ராஸ் டெய்லர் 231 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 21 சதம், 51 அரைசதங்களுடன் 8570 ரன்கள் அடித்துள்ளார். 100 டி20 போட்டிகளில் 7 அரைசதங்களுடன் 1909 ரன்கள் அடித்துள்ளார்.

99 டெஸ்ட் போட்டிகளில் 19 சதம், 33 அரைசதங்களுடன் 7174 ரன்கள் அடித்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான போட்டியின் மூலம் 100 போட்டிகளில் விளையாடி வீரர் என்ற சாதனையை படைக்க இருக்கிறார்.
Tags:    

Similar News