செய்திகள்
பாகிஸ்தான் வீரர்கள் சதம்

ஒரே இன்னிங்சில் 4 வீரர்கள் சதம்: இந்தியாவுக்கு அடுத்தபடியாக பாகிஸ்தான் சாதனை

Published On 2019-12-22 10:06 GMT   |   Update On 2019-12-22 10:06 GMT
இலங்கைக்கு எதிரான கராச்சி டெஸ்டில் பாகிஸ்தான் வீரர்கள் நான்கு பேர் சதம் அடித்து சாதனைப் படைத்துள்ளனர்.
பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கராச்சியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 191 ரன்னில் சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இலங்கை 271 ரன்கள் சேர்த்தது.

80 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்ததால் இலங்கை இந்த டெஸ்டில் ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2-வது இன்னிங்சில் பாகிஸ்தானின் முதல் நான்கு பேட்ஸ்மேன்களும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

தொடக்க வீரர்களான ஷான் மசூத், அபித் அலி இணைந்து முதல் விக்கெட்டுக்கு 278 ரன்கள் குவித்தனர். ஷான் மசூத் 135 ரன்களும், அபித் அலி 174 ரன்களும் விளாசினர். அடுத்து வந்த கேப்டன் அசார் அலி 118 ரன்கள் சேர்த்தார். பாகிஸ்தான் நட்சத்திர வீரரான பாபர் அசாம் 131 பந்தில் 100 ரன்கள் சேர்த்தார்.



முதல் இன்னிங்சில் தடுமாறிய நான்கு வீரர்களும் 2-வது இன்னிங்சில் சதம் அடித்தனர். மேலும், ஒரே இன்னிங்சில் நான்கு வீரர்கள் சதம் அடித்த 2-வது அணி என்ற சாதனையை படைத்தது. இதற்கு முன் இந்தியாவின் சச்சின் தெண்டுல்கர் (122), ராகுல் டிராவிட் (129), வாசிம் ஜாபர் (138), தினேஷ் கார்த்திக் (129) வங்காள தேசம் அணிக்கெதிராக சதம் அடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News