செய்திகள்
கேஎல் ராகுல்

எந்தவொரு வீரருக்கும் எளிதானது அல்ல: லோகேஷ் ராகுல்

Published On 2019-12-12 15:28 IST   |   Update On 2019-12-12 15:28:00 IST
சர்வதேச அணிக்கு வருவதும், போவதுமாக இருந்தால், அது எந்தவொரு வீரருக்கும் எளிதானதல்ல என லோகேஷ் ராகுல் தெரிவித்துள்ளார்.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இந்த தொடருக்கான இந்திய அணியில் தொடக்க வீரரான ஷிகர் தவான் காயம் காரணமாக இடம்பெறவில்லை.

இதனால் லோகேஷ் ராகுல் தொடக்க வீரராக களம் இறங்கினார். அவர் ஐதராபாத்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் அரைசதம் அடித்தார். நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற கடைசி ஆட்டத்தில் 91 ரன்கள் விளாசினார்.

மூன்று போட்டிகளிலும் 164 ரன்கள் விளாசினார். இந்தத் தொடரில் விராட் கோலிக் (183) அடுத்தபடியாக அதிக ரன்கள் குவித்த அவர், சர்வதேச போட்டிக்கு வருவதும், போவதுமாக இருந்தால் அது எளிதானது அல்ல என லோகேஷ் ராகுல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து லோகேஷ் ராகுல் கூறுகையில் ‘‘நெருக்கடி இல்லை என்று நான் சொல்லமாட்டேன். அணிக்கு வருவதும் செல்வதுமாக இருந்தால், அது எந்தவொரு வீரருக்கும் எளிதானதாக இருக்காது. சர்வதேச போட்டிக்கான நெருக்கடியாக எதிர்கொண்டால்தான், எளிதாக சென்று ரன்கள் அடிக்க முடியும். மேலும், டி20 கிரிக்கெட் ஆட்டம் வீரர்களின் நம்பிக்கையை பொறுத்துதான்’’ என்றார்.

Similar News