செய்திகள்
ரகானே

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான 9 வருட தொடர்பை முடித்துக் கொள்கிறார் ரகானே

Published On 2019-11-14 11:09 GMT   |   Update On 2019-11-14 11:09 GMT
ஐபிஎல் டி20 லீக்கில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக கடந்த 9 வருடங்களாக விளையாடி வந்த ரகானே டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு மாற இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.
இந்திய டெஸ்ட் அணியின் துணைக் கேப்டனாக இருப்பவர் ரகானே. இவர் கடந்த 2011-ல் இருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். 2019 சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருந்தார். இவரது தலைமையில் 8 போட்டிகளில் 2-ல் மட்டுமே ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி பெற்றிருந்ததால், கேப்டன் பதவில் இருந்து நீக்கப்பட்டார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ரகானேவுக்கு நான்கு கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது ரகானே டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு மாற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரகானேவை கொடுத்துவிட்டு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இருந்து இரண்டு வீரர்களை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்க இருக்கிறது.

2019 சீசனில் பிளே-ஆப்ஸ் சுற்று வரை முன்னேறிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பேட்டிங்கை வலுப்படுத்த இன்னும் வலுப்படுத்த இருக்கிறது. அந்த அணியில் பிரித்வி ஷா, தவான், ஷ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பந்த், ஹனுமா விஹாரி ஆகியோர் உள்ளனர். தற்போது ரகானே சேர்ந்தால் பேட்டிங் ஆர்டர் இன்றும் வலுப்பெறும் என நம்புகிறது.

2020 ஐபிஎல் சீசனுக்கான வீரர்கள் வெளியேற்றுதல், வீரர்களை வாங்குதல் போன்ற பணிகளை இன்றுடன் முடித்துக் கொள்ள வேண்டும். ஆகையால் எந்தெந்த அணிகள் யார் யாரை தக்க வைத்துள்ளது என்பது தெளிவாக தெரிந்துவிடும்.

ரகானே 110 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 3820 ரன்கள் அடித்துள்ளார். இதில் 27 அரைசதங்கள், இரண்டு சதங்கள் அடங்கும்.
Tags:    

Similar News