செய்திகள்
டெஸ்ட் போட்டிக்கான டாஸ் சுண்டும் கோலி.

முதல் டெஸ்ட் கிரிக்கெட்- டாஸ் வென்று வங்காளதேச அணி பேட்டிங் தேர்வு

Published On 2019-11-14 04:23 GMT   |   Update On 2019-11-14 04:23 GMT
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வங்காளதேச அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.
இந்தூர்:

இந்தியா-வங்காளதேச அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இந்தூரில் இன்று தொடங்கியது. இந்த போட்டிக்னாடாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. வங்காளதேச அணியில் முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ள மொமினுல் ஹக், டாஸ் வென்றதுடன், முதலில் பேட்டிங் செய்யும் முடிவை தைரியமாக எடுத்துள்ளார். 

துவக்க வீரர்களாக ஷத்மான் இஸ்லாம், இம்ருல் கயீஸ் ஆகியோர் களமிறங்கினர். மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுடன் இந்தியா களமிறங்கி உள்ளது. 



இந்திய அணி விவரம்: ரோகித் சர்மா, அகர்வால், புஜாரா, கோலி, ரகானே, ஜடேஜா, சகா, அஷ்வின், ஷமி, யாதவ், இஷாந்த்.



வங்காளதேச அணி:  இம்ருல் கயீஸ், ஷத்மான், மிதுன், மொமினுல் ஹக், முஷ்பிகுர், மஹ்முதுல்லா, லித்தன், மெகிடி, தாய்ஜூல், அபு ஜாயேத், எபடாட்.
Tags:    

Similar News