செய்திகள்
கசுன் ரஜிதா

டி20 கிரிக்கெட்டில் 4 ஓவரில் 75 ரன்கள் விட்டுக்கொடுத்து இலங்கை வீரர் மோசமான சாதனை

Published On 2019-10-28 10:10 GMT   |   Update On 2019-10-28 10:10 GMT
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் நான்கு ஓவர்களில் 75 ரன்கள் விட்டுக்கொடுத்து மோசமான சாதனையை பதிவு செய்துள்ளார் இலங்கை பந்து வீச்சாளர்.
ஆஸ்திரேலியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 2 விக்கெட் இழப்பிற்கு 233 ரன்கள் குவித்தது. டேவிட் வார்னர் 100 ரன்களும், ஆரோன் பிஞ்ச் 36 பந்தில் 64 ரன்களும், மேக்ஸ்வெல் 28 பந்தில் 62 ரன்களும் விளாசினார்.

இலங்கை அணியின் கசுன் ரஜிதா நான்கு ஓவர்கள் வீசி விக்கெட் ஏதும் வீழ்த்தாமல் 75 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதன்மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் நான்கள் ஓவர்கள் வீசி அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த வீரர் எனற் மோசமான சாதனையை படைத்துள்ளார்.

இதற்கு முன் துருக்கி பந்து வீச்சாளர் 70 ரன்களும், அயர்லாந்து வீரர் 69 ரன்களும், தென்ஆப்பிரிக்கா வீரர் 68 ரன்களும் விட்டுக்கொடுத்துள்ளர்.
Tags:    

Similar News