செய்திகள்

இங்கிலாந்து பேட்ஸ்மேன் வில் ஜேக்ஸ் 25 பந்தில் சதம் அடித்து சாதனை

Published On 2019-03-21 18:06 IST   |   Update On 2019-03-21 18:06:00 IST
இங்கிலாந்து பேட்ஸ்மேன் வில் ஜேக்ஸ் ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் விளாசியதுடன் 25 பந்தில் சதம் அடித்து சாதனைப் படைத்துள்ளார். #T10Cricket
துபாயில் டி10 கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு முன்னோட்டமாக கருதப்படும் போட்டி ஒன்றில் இங்கிலாந்து கவுண்ட்டி அணிகளான சர்ரே - லாங்காஷைர் அணிகள் மோதின.

சர்ரே அணி பேட்டிங் செய்யும்போது அந்த அணியின் முன்னணி பேட்ஸ்மேனான வில் ஜேக்ஸ் வாணவேடிக்கை நிகழ்த்தினார். ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் விளாசிய ஜேக்ஸ் 25 பந்தில் சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 29 பந்தில் 105 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

தொழில்முறை கிரிக்கெட்டில் கிறிஸ் கெய்ல் 30 பந்தில் சதம் அடித்ததே சாதனையாக இருந்து வருகிறது. தற்போது வில் ஜேக்ஸ் அதை முறியடித்துள்ளார்.
Tags:    

Similar News