செய்திகள்

முதல்தர போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் ‘டபுள் செஞ்சூரி’: இலங்கை வீரர் அரிய சாதனை

Published On 2019-02-04 17:17 IST   |   Update On 2019-02-04 17:17:00 IST
இலங்கை வீரர் ஏஞ்சலோ பெரேரா முதல்தர போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் டபுள் செஞ்சூரி அடித்து அரிய சாதனையை படைத்துள்ளார்.
கிரிக்கெட் போட்டியில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டு வருகின்றன. சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலோ அல்லது நான்கு நாட்கள் கொண்ட உள்ளூர் முதல்தர போட்டியிலோ இரண்டு இன்னிங்சிலும் இரட்டை சதம் அடிப்பது அரிதான விஷயமாகும்.

1938-ம் ஆண்டு கவுன்ட்டி கிரிக்கெட்டில் கென்ட் அணி பேட்ஸ்மேன் ஆர்தர் ஃபாக் முதல் இன்னிங்சில் 244 ரன்களும், 2-வது இன்னிங்சில் ஆட்டமிழக்காமல் 202 ரன்களும் குவித்திருந்தார். இதன்மூலம் இரண்டு இன்னிங்சிலும் இரட்டை சதம் விளாசிய வீரர் என்ற அரிய சாதனையைப் படைத்தார்.

தற்போது இலங்கையைச் சேர்ந்த ஏஞ்சலோ பெரேரா சிங்களேஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணிக்கெதிராக முதல் இன்னிங்சில் 203 பந்தில் 201 ரன்கள் விளாசினார். 2-வது இன்னிங்சில் 268 பந்தில் 231 ரன்கள் குவித்தார். இதன்மூலம் 81 வருட அரிய சாதனையை பெரேரா சமன் செய்துள்ளார்.
Tags:    

Similar News