செய்திகள்

இலங்கை அணியின் புதிய கேப்டனாக திசாரா பெரேரா நியமனம்

Published On 2017-11-29 11:20 GMT   |   Update On 2017-11-29 11:21 GMT
இந்தியாவுக்கு எதிராக விளையாட இருக்கும் இலங்கை ஒருநாள் மற்றும் 20 ஓவர் அணியின் கேப்டனான திசாரா பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு:

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 டெஸ்ட் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 2-ந்தேதி டெல்லி பெரோசா கோட்லா மைதானத்தில் தொடங்குகிறது.

இதை தொடர்ந்து இந்தியா- இலங்கை அணிகள் இடையே 3 ஒருநாள் போட்டியும், மூன்று 20 ஓவர் ஆட்டமும் நடக்கிறது. டிசம்பர் 10, 13 மற்றும் 17-ந் தேதிகளில் ஒருநாள் போட்டியும், டிசம்பர் 20, 22 மற்றும் 24-ந் தேதிகளில் இருபது ஓவர் போட்டியும் நடக்கிறது. ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. 20 ஓவருக்கு இன்னும் தேர்வு செய்யப்படவில்லை.



இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து இதுவரை இலங்கை அணியின் கேப்டனாக உபுல் தரங்கா செயல்பட்டார். அவரது தலைமையில் இலங்கை அணி இந்தியா, தென்னாப்ரிக்கா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் விளையாடிய மூன்று தொடர்களையும் இழந்தது. 2017-ம் ஆண்டில் இலங்கை அணி ஒரு ஒருநாள் போட்டியில் கூட ஜெயிக்கவில்லை.

இதையடுத்து இலங்கையின் ஒருநாள் மற்றும் 20 ஓவர் தொடரின் கேப்டனாக திசாரா பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். 
Tags:    

Similar News