செய்திகள்
இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் கொண்டு வெளியாகும் முதல் ஸ்மார்ட்போன்
சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒன்பிளஸ் இந்தியாவில் அடுத்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனினை வெளியிட தயாராகி வருகிறது. ஒன்பிளஸ் 5 விரைவில் வெளியாகவுள்ள நிலையில், இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் இதுவாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
புதுடெல்லி:
சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒன்பிளஸ் இந்தியாவில் தனது புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனினை வெளியிடவுள்ளது. விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், புதிய ஒன்பிளஸ் 5 ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் கொண்டிருக்கும் என ஒன்பிளஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் கொண்டு வெளியாகும் முதல் ஸ்மார்ட்போனாக இது இருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் முந்தைய பிராசஸர்களை விட 35 சதவிகிதம் சிறியதாகவும், 25 சதவிகிதம் குறைவான மின்சக்தியை பயன்படுத்தி, நீண்ட நேர பேட்டரி பேக்கப் வழங்கும்.
புதிய ஸ்னாப்டிராகன் 835 சிப்செட், அடுத்த தலைமுறை பொழுதுபோக்கு வசதிகள் மற்றும் இணைக்கப்பட்ட கிளவுட் சேவைகளை ஸ்மார்ட்போன், விர்ச்சுவல் ரியாலிட்டி, ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி ஹெட்-மவுண்ட்டெட் டிஸ்ப்ளேக்கள், ஐ.பி. கேமரா, டேப்லெட்கள், கணினி மற்றும் இதர இயங்குதளம் கொண்டுள்ள சாதனங்களில் வேலை செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் 5 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் சார்ந்து இதுவரை வெளியாகியுள்ள தகவல்களில் QHD 4K HDR டிஸ்ப்ளே, கூகுள் டேடிரீம் விர்ச்சுவல் ரியாலிட்டி வசதி, பெசல் லெஸ் டிஸ்ப்ளே, வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி, 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.