இந்தியா

உத்தரபிரதேசத்தில் சிறுத்தை தாக்கி சிறுமி பலி

Published On 2023-02-18 13:57 IST   |   Update On 2023-02-18 13:57:00 IST
  • ஊருக்குள் புகுந்த சிறுத்தை ஒன்று சிறுமி அதிதியை தாக்கியது.
  • கிராம மக்கள், சிறுத்தையை விரட்டியடித்தனர். படுகாயம் அடைந்த சிறுமியை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

உத்தரபிரதேச மாநிலம் சோட்டா கிரத்பூர் கிராமத்தை சேர்ந்த அதிதி என்ற 14 வயது சிறுமி தனது தாயுடன் அப்பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்றார். அப்போது ஊருக்குள் புகுந்த சிறுத்தை ஒன்று சிறுமி அதிதியை தாக்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள், சிறுத்தையை விரட்டியடித்தனர். படுகாயம் அடைந்த சிறுமியை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Similar News