இந்தியா

நொய்டாவில் 6 மாடி கட்டிடத்தில் தீ விபத்து- 50 பேர் பத்திரமாக மீட்பு

Published On 2022-12-03 12:11 IST   |   Update On 2022-12-03 12:11:00 IST
  • நொய்டா மேற்கு பிஸ்ராக் என்ற பகுதியில் சாபெரி என்ற கிராமம் உள்ளது.
  • தீ விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.

நொய்டா:

உத்தரபிரதேச மாநிலம் நொய்டா மேற்கு பிஸ்ராக் என்ற பகுதியில் சாபெரி என்ற கிராமம் உள்ளது. இங்குள்ள 6 மாடி கட்டிடத்தின் கீழ் தளத்தில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மள மளவென பரவ தொடங்கியது. இதுபற்றி அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது. இந்த தீ விபத்தின் போது அந்த கட்டிடத்தில் வசித்து வந்த சுமார் 50 பேர் வெளியே வரமுடியாமல் தவித்தனர். உடனே துரிதமாக செயல்பட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் அவர்களை மாடிப்படி வழியாக பத்திரமாக மீட்டனர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

Similar News