பெண்கள் கணக்கில் ரூ.10 ஆயிரம் டெபாசிட் செய்யப்பட்டதுதான் என்.டி.ஏ. வெற்றிக்கு காரணம்: ஜன் சுராஜ்
- பீகார் தேர்தலில் பிரசாந்த் கிஷோர் கட்சி படுதோல்வியடைந்தது.
- ஒன்றிரண்டு இடங்களை தவிர்த்து மற்ற இடங்களில் டெபாசிட் இழந்தது.
பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றிக்கு பெண்களின் வங்கி கணக்குகளுக்கு 10 ஆயிரம் ரூபாய் பண பரிமாற்றம்தான் முக்கிய பங்கு வகித்தது என படுதோல்வியடைந்த பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி தெரிவித்துள்ளார்.
வேலையின்மை, இடம்பெயர்வு மற்றும் மாநிலத்தில் தொழில் பற்றாக்குறை போன்ற அழுத்தமான பிரச்சினைகளை எழுப்பி, அதிக அளவில் பிரசாரம் செய்த போதிலும், ஜன் சுராஜ் கட்சியால் தனக்கு ஆதரவாக வாக்குகளை பெற முடியவில்லை.
தேர்தலில் படுதோல்வியடைந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய ஜன் சுராஜ் கட்சியின் தேசியத் தலைவர் உதய் சிங், "சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் நாங்கள் ஏமாற்றமடைந்துள்ளோம். ஆனால் நாங்கள் அப்செட் ஆகவில்லை. நாங்கள் ஒரு இடத்தைக் கூட வெல்லவில்லை என்றாலும், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியை நாங்கள் தொடர்ந்து எதிர்ப்போம்.
மக்கள் ராஷ்டிரிய ஜனத தளம் மீண்டும் வெற்றி பெறுவதை விரும்பவில்லை என்பதையும் இந்த தீர்ப்பு நிரூபிக்கிறது. பீகாரில் ஆளும் NDA அரசாங்கத்தால் பெண்களின் கணக்குகளுக்கு ரூ.40,000 கோடி பணப் பரிமாற்றம் செய்யப்பட்டது. இது வெற்றியில் முக்கிய பங்கு வகித்தது" என்றார்.
பீகாரில் உள்ள ஒவ்வொரு பெண்களுடைய வங்கிக் கணக்கில் தொழில் தொடங்கும் வகையில் தலா ரூ. 10 ஆயிரம் டெபாசிட் செய்யப்பட்டது. தேர்தல் நன்னடத்தை விதி அமமல்படுத்தபின்னரும், இந்த பணம் டெபாசிட் செய்யப்பட்டதாக ஜன் சுராஜ் தெரிவித்துள்ளார்.