இந்தியா
உள்துறை மந்திரி அமித் ஷா

உலகின் நம்பர் 1 நாடாக இந்தியாவை மாற்ற பிரதமர் மோடி இலக்கு - அமித் ஷா

Update: 2022-04-23 10:26 GMT
அமித்ஷாவை 77,000 பாஜக உறுப்பினர்கள் தேசிய கொடியை ஏந்தியபடி வரவேற்றனர்.
ஜக்தீஷ்பூர்:

வரும் 2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவை உலகின் நம்பர் நாடாக மாற்ற பிரதமர் மோடி இலக்கு நிர்ணயித்துள்ளதாக உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார்.

1857ம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய் கலகத்தில் பங்கேற்ற வீர் குன்வர் சிங்கின் நினைவு நாள் இன்று பீகாரில் அனுசரிக்கப்பட்டு வருகிறது.  இதையடுத்து அவரது நினைவிடத்திற்கு சென்ற அமித் ஷா மரியாதை செலுத்தினார். அவரது வருகையையொட்டி 77,000 பாஜக உறுப்பினர்கள் தேசிய கொடியை ஏந்தியபடி வந்திருந்தனர். 

அப்போது அமித்ஷா பேசியதாவது:-

பிரதமர் மோடி அரசு கொரோனா பெருந்தொற்றை சிறப்பாக கையாண்டு மக்களை காத்தது. தடுப்பூசி செலுத்தும் பணியை துரிதப்படுத்தியது. மக்களுக்கு இலவச ரேஷன் பொருட்களை வழங்கியுள்ளது. ஆர்.எஸ்.எஸ் தலைவர் வி.டி சவார்க்கார் 1857 நடைபெற்ற கிளர்ச்சியை சவார்க்கார் இந்தியாவின் முதல் சுதந்திர போர் என வர்ணித்துள்ளார். சுதந்திர இந்தியாவை 2047-ம் ஆண்டு சுதந்திர தினத்தன்று உலகின் நம்பர் நாடாக வளர்ச்சி அடைய வைக்க பிரதமர் மோடி இலக்கு நிர்ணயித்துள்ளார்.

இவ்வாறு அமித்ஷா கூறினார்.
Tags:    

Similar News