செய்திகள்
அத்வானியுடன் கலந்துரையாடிய தலைவர்கள்

அத்வானியின் வீட்டுக்குச் சென்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த மோடி- தலைவர்கள்

Published On 2021-11-08 05:54 GMT   |   Update On 2021-11-08 05:54 GMT
அத்வானியின் வீட்டுக்குச் சென்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தலைவர்கள், அவருடன் சிறிது நேரம் கலந்துரையாடினர்.
புதுடெல்லி:

முன்னாள் துணை பிரதமரும், பாஜகவின் தலைவராக நீண்ட காலம் பணியாற்றியவருமான எல்.கே. அத்வானி இன்று தனது 94வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், உள்துறை மந்திரி அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோர் அத்வானியின் வீட்டுக்குச் சென்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் அனைவரும் அத்வானியுடன் அமர்ந்து சிறிது நேரம் கலந்துரையாடினர்.
Tags:    

Similar News