செய்திகள்
பிரியங்கா காந்தி

குற்றவாளிகளை பாதுகாப்பதே தொடர் குற்றங்களுக்கு வழிவகுக்கிறது - யோகி ஆதித்யநாத் ஆட்சி மீது பிரியங்கா கடும் சாடல்

Published On 2020-10-13 23:07 GMT   |   Update On 2020-10-13 23:07 GMT
யோகி ஆதித்யநாத் அரசாங்கம், பெண்களுக்கு எதிரான குற்றங்களை நியாயப்படுத்துவதும், அரசியல் நோக்கத்துடன் குற்றவாளிகளை பாதுகாப்பதுமே என பிரியங்கா காந்தி கடுமையாக கண்டித்து உள்ளார்.
புதுடெல்லி:

உத்தரபிரதேசத்தில் ஹத்ராஸ் கற்பழிப்பு-கொலை சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. இந்த நிலையில் அங்குள்ள கோண்டா நகரத்திற்கு அருகே தூங்கிக்கொண்டிருந்த 3 சகோதரிகள் மீது திராவகம் வீசப்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தில் அக்காளுடன் தூங்கிக்கொண்டிருந்த அவரது சகோதரிகளான 2 சிறுமிகளும் காயம் அடைந்துள்ளனர்.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக நடந்து வரும் உத்தரபிரதேச அரசை, காங்கிரஸ் பெண் தலைவரான பிரியங்கா காந்தி கடுமையாக கண்டித்து உள்ளார்.

“யோகி ஆதித்யநாத் அரசாங்கம், பெண்களுக்கு எதிரான குற்றங்களை நியாயப்படுத்துவதும், அரசியல் நோக்கத்துடன் குற்றவாளிகளை பாதுகாப்பதுமே அங்கு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்க காரணமாகும்” என்று பிரியங்கா கூறி உள்ளார்.
Tags:    

Similar News