செய்திகள்

தண்டனையை ரத்து செய்ய குஜராத் ஐகோர்ட் மறுப்பு - தேர்தலில் ஹர்திக் பட்டேல் போட்டி இல்லை

Published On 2019-03-29 16:40 IST   |   Update On 2019-03-29 16:40:00 IST
குஜராத் மாநிலத்தில் போராட்டத்தின்போது வெடித்த வன்முறை தொடர்பாக விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்யுமாறு ஹர்திக் பட்டேல் தொடர்ந்த வழக்கை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. #HardikPatel #HardikPatel #HardikPatelconviction #HardikPatelappeal
அகமதாபாத்:

குஜராத் மாநிலத்தில் பட்டேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டிடார் அனாமத் அன்டோலன் சமிதி என்ற இயக்கத்தின் தலைவர் ஹர்திக் பட்டேல் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடர்ச்சியாக 19 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார்.

இதற்கு முன்னரும் பலமுறை இதே கோரிக்கைக்காக பலமுறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். பட்டேல் இனத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டு குஜராத் மாநிலம், மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள விஸ்நகர் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தின்போது வெடித்த கலவரம் தொடர்பான வழக்கில் ஹர்திக் பட்டேலுக்கு விசாரணை நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்திருந்தது. இந்த தண்டனையை எதிர்த்து குஜராத் ஐகோர்ட்டில் அவர் மேல்முறையீடு செய்துள்ளார்.

சமீபத்தில் ஹர்திக் பட்டேலுக்கு திருமணம் நடந்தது.  குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத் நகரில் கடந்த 12-ம் தேதி நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்துக்கு வந்த  ஹர்திக் பட்டேல், அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில்  காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.


பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக அவர் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் விஸ்நகர் மாஜிஸ்திரேட் கோர்ட் விதித்த சிறை தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என குஜராத் ஐகோர்ட்டில் ஹர்திக் பட்டேல் தனியாக வழக்கு தொடர்ந்தார்.

அவரது கோரிக்கையை அனுமதிக்க கூடாது என குஜராத் அரசின் சார்பில் எதிர்மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி ஹர்திக் பட்டேலின் கோரிக்கை நிராகரிக்கப்படுவதாக அறிவித்தார்.

இதைதொடர்ந்து, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி ஹர்திக் பட்டேல் இந்த தேர்தலில் போட்டியிட முடியாத நிலைமை உருவாகியுள்ளது. #HardikPatel #HardikPatel #HardikPatelconviction #HardikPatelappeal
Tags:    

Similar News