செய்திகள்

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.10 ஆயிரம் அளித்த வக்ப் வாரிய தலைவர்

Published On 2018-06-24 14:23 IST   |   Update On 2018-06-24 14:23:00 IST
அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணிக்கு உத்தரப்பிரதேசம் மாநில ஷியா வக்ப் வாரிய தலைவர் 10 ஆயிரம் ரூபாய் நன்கொடை அளித்துள்ளார். #UPwaqfboardchairman #AyodhyaRamTemple
லக்னோ:

அயோத்தியில் இரு பிரிவினர் சொந்தம் கொண்டாடிவரும் நிலையில் ராமர் கோயில் கட்டுவது தொடர்பாக நடைபெற்ற பயிற்சி பட்டறையை உத்தரப்பிரதேசம் மாநில ஷியா மத்திய வக்ப் வாரிய தலைவர் வசீம் ரிஸ்வி நேற்று பார்வையிட்டார்.

பின்னர், ராமர் கோயில் கட்டும் பணிக்கு 10 ஆயிரம் ரூபாய் நன்கொடையாக அளித்தார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரிஸ்வி, அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில் முஸ்லிம்கள் வெற்றி பெறுவதைவிட இந்துக்களின் மனங்களை வெற்றிகொள்வது நல்லதாக இருக்கும். என்று குறிப்பிட்டார்.

ராமர் கோயில் கட்டுமானப் பணிகளுக்கு நான் அளித்துள்ள இந்த சிறிய நன்கொடையை ராமர் கோயில் தொடர்பான எனது அன்பு மற்றும் நாட்டு மக்களிடையே சகோதரத்துவத்தை ஏற்படுத்தும் வெளிப்பாடாக பார்க்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

ஆரம்பத்தில் இருந்தே ராமர் கோயிலுக்கு ஆதரவாக பேசி வரும் வசீம் ரிஸ்விக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வந்ததால் அவருக்கு உ.பி. அரசின் சார்பில் ஒய் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #UPwaqfboardchairman   #AyodhyaRamTemple
Tags:    

Similar News