செய்திகள்

சாதி முத்திரையை தொடர்ந்து ஒரே அறையில் இரு பாலருக்கும் உடற்தகுதி சோதனை

Published On 2018-05-02 15:01 IST   |   Update On 2018-05-02 15:01:00 IST
மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் கான்ஸ்டபிள் பணிக்கு தேர்ச்சி பெற்ற ஆண் மற்றும் பெண்களுக்கு ஒரே அறையில் உடற்தகுதி சோதனை நடத்தியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #MPPoliceSelection
போபால்:

மத்தியப்பிரதேசம் காவல்துறையில் கான்ஸ்டபிள் பணிக்கு சமீபத்தில் பரீட்ச்சை நடத்தப்பட்டது. இதில், தார் என்ற பகுதியில் தேர்வானவர்களுக்கு நடத்தப்பட்ட உடற்தகுதி சோதனையில் அவர்களின் சாதி பிரிவை நெஞ்சில் எழுதியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விசாரணயும் நடந்து வருகிறது.

உடல் தகுதி தேர்வில் நெஞ்சில் சாதி முத்திரை

இந்நிலையில், பிஹிந் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் தேர்வான 500 பேருக்கு உடற்தகுதி பரிசோதனை இன்று நடந்தது. அங்கு, ஒரே அறையில் ஆண்கள் உள்ளாடையுடன் பரிசோதனைக்கு நிற்க, அதே அறையில் பெண் தேர்வர்கள் நின்று கொண்டிருந்தனர்.

மேலும், பெண் தேர்வர்களை பெண் டாக்டர்கள்தான் பரிசோதிக்க வேண்டும் என்ற விதி உள்ள நிலையில், ஆண் டாக்டர்களே பெண் தேர்வர்களை பரிசோதனை செய்தனர். இந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பேட்டியளித்த, தலைமை மருத்துவர், “இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. யார் தவறு இழைத்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறினார். 

Similar News