செய்திகள்

25 நகரங்களில் 400 நகைக்கடைகளில் தங்கம் விற்பனை அதிகரிப்பு

Published On 2016-11-15 04:42 GMT   |   Update On 2016-11-15 04:42 GMT
இந்தியா முழுவதும் 25 நகரங்களில் 400 நகைக்கடைகளில் கண்காணிப்பு ரகசியமாக நடந்தது. அப்போது 400 நகை கடைகளில் கடந்த 4 நாட்களாக பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் சட்டவிரோதமான வகையில் பயன்படுத்தப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.
புதுடெல்லி:

ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதும் நிறைய பேர் அந்த நோட்டுகளைக் கொடுத்து விட்டு தங்கமாக வாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வெளியான 8-ந்தேதி இரவு பல நகை கடைகளில் இரவு நீண்ட நேரம் வியாபாரம் நடந்துள்ளது.

இதையடுத்து நாடெங்கும் வருமான வரித்துறை அதிகாரிகள் நகை கடைகளில் அதிரடி சோதனை நடத்தினார்கள். குறிப்பிட்ட தொகைக்கு மேல் பழைய நோட்டுகளை கொடுத்து விட்டு தங்கம் வாங்கி சென்றது யார்-யார் என்ற ஆய்வு நடத்தி வருகிறார்கள்.

இந்தியா முழுவதும் சுமார் 25 லட்சம் நகை விற்பனையாளர்கள் உள்ளனர். இவற்றில் பெரிய நகை கடைகளை மட்டுமே சுங்க அதிகாரிகள் ரகசியமாக கண்காணித்தனர். இந்தியா முழுவதும் 25 நகரங்களில் இந்த கண்காணிப்பு மிகவும் ரகசியமாக நடந்தது.

அப்போது 400 நகை கடைகளில் கடந்த 4 நாட்களாக பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் சட்டவிரோதமான வகையில் பயன்படுத்தப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இந்த 400 கடைகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்கள்.

அதில் சந்தேகப்படும்படியான பண பரிவர்த்தனை நடந்து இருப்பதாக தெரிய வந்தால் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்புகிறார்கள். ஒரு நகைக்கடைக்காரர் மட்டும் கடந்த 3 நாட்களில் 201 கிலோ தங்கம் விற்பனை செய்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த நகை கடையின் கணக்குகளை வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

Similar News