உண்மை எது

பெண்ணின் காதுக்குள் புகுந்த பாம்பு... வைரலாகும் வீடியோ

Update: 2022-09-12 06:46 GMT
  • பேஸ்புக் பயனர் ஒருவர் இந்த வீடியோவை போஸ்ட் செய்துள்ளார்.
  • இது போலி வீடியோ என்றும், இதுபோல் நடக்க சாத்தியமில்லை என்றும் பலர் கூறி உள்ளனர்.

பெண் ஒருவரின் காதுக்குள் புகுந்துள்ள பாம்பை மருத்துவர் அகற்ற முயலும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்த வீடியோவில், பெண் ஒருவரின் காதில் பாம்பு நுழைந்து தெரிவது போன்றும், அதனை ஒருவர் எடுக்க முயற்சிப்பதும் இடம் பெற்றுள்ளது. ஆனால் பாம்பை வெளியே எடுத்தார்களா? எங்கே நடந்த‌து என்பது போன்ற எந்த விவரம் அந்த வீடியோவில் இடம்பெறவில்லை.

பேஸ்புக் பயனர் ஒருவர் இந்த வீடியோவை போஸ்ட் செய்துள்ளார். காதுக்குள் புகுந்த பாம்பு என்ற தலைப்பிட்டு அவர் பகிர்ந்த வீடியோ, அதிகம் பகிரப்பட்டுள்ளது. வீடியோவைப் பார்த்த பலரும் அதிர்ச்சியடைந்தனர். தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர். சிலர் வீடியோவைப் பகிர்ந்த பேஸ்புக் பயனரிடம் முழு வீடியோவையும் வெளியிடும்படி கூறி உள்ளனர். பாம்பு எப்படி காதுக்குள் நுழைந்தது? என பலர் ஆச்சயரித்துடன் தெரிவித்தனர். அந்த பெண்ணின் நிலை குறித்து சிலர் வருத்தம் தெரிவித்தனர். இது போலி வீடியோ என்றும், இதுபோல் நடக்க சாத்தியமில்லை என்றும் பலர் கூறி உள்ளனர்.

Similar News