உண்மை எது
அத்வானி அழுததாக பகிரப்படும் வீடியோ

தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தை பார்த்துவிட்டு அழுத பா.ஜ.க தலைவர் அத்வானி? - பரவி வரும் வீடியோ

Published On 2022-03-18 12:00 GMT   |   Update On 2022-03-18 12:00 GMT
தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தை பார்த்துவிட்டு அத்வானி அழுததாக வெளியான வீடியோவை பா.ஜ.க தலைவர்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்தி திரைப்படம் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’. 

இத்திரைப்படம் 1989 முதல் 1990 ஆண்டுகளில் காஷ்மீரில் இருந்து புலம் பெயர்ந்த காஷ்மீரி இந்து பண்டிட்களின் வாழ்க்கையை பேசுகிறது. இப்படத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துக்கள் பிரசாரம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.

இந்நிலையில் இப்படத்தை பார்த்துவிட்டு பா.ஜ.கவின் மூத்த தலைவர்களில் ஒருவரான எல்.கே அத்வானி அழுததாக இணையத்தில் வீடியோ ஒன்று பரவி வருகிறது.

அந்த வீடியோவை பாஜக தலைவர்கள் சிலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.  இந்நிலையில் அந்த வீடியோ குறித்து வெளியான தகவல் உண்மையில்லை என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

பா.ஜ.க தலைவர் திரையரங்கில் படம் பார்த்துவிட்டு அழுதது உண்மை தான். ஆனால் அவர் காஷ்மீரி ஃபைல்ஸ் திரைப்படத்தை பார்த்து அழவில்லை. 2020-ம் ஆண்டு, அப்போது வெளியான ஷிகாரா என்ற படத்தை பார்த்துவிட்டு அத்வானி அழும் காட்சிகள் தான் இப்போது தவறாக பரபப்பட்டு வருகின்றன என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News