உண்மை எது
வடகொரிய அதிபருடன் புதின்

ரஷியாவிற்கு ஆதரவு வேண்டி தென் கொரிய அதிபரை சந்தித்த புதின்?- தீயாய் பரவி வரும் வீடியோ

Published On 2022-03-11 17:42 IST   |   Update On 2022-03-11 17:42:00 IST
உக்ரைனுக்கு எதிரான போரில் ஆதரவு வேண்டி ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் தென் கொரிய அதிபரை சந்தித்தாக வீடியோவில் கூறப்படுகிறது.
உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு 2 வாரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது. உலக நாடுகள் அனைத்தும் போருக்கு எதிராக கண்டனங்களை தெரிவித்து ரஷியா மீது பொருளாதார தடையை விதித்துள்ளன.

இதையடுத்து தனது நாட்டிற்கு ஆதரவு வேண்டி ரஷிய அதிபர் புதின் தென் கொரியா அதிபரை சந்தித்தது போன்ற வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. இந்நிலையில் இந்த வீடியோவில் இருக்கும் தகவல் உண்மை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இணையத்தில் உலவி வரும் வீடியோ 2019-ம் ஆண்டு எடுக்கப்பட்டது. அதேபோன்று அந்த வீடியோவில் இருப்பது தென் கொரிய அதிபர் இல்லை வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன். ரஷியாவிற்கு வருகை புரிந்த வட கொரிய அதிபரை புதின் சந்திக்கும் வீடியோவை பகிர்ந்து பலரும் பொய் செய்தியை பரப்பி வருகின்றனர் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Similar News