உண்மை எது
லதா மங்கேஷ்கர்

லதா மங்கேஷ்கர் உடல்நலம் பற்றிய பகீர் தகவல் - அப்டேட் கொடுத்த மருத்துவமனை

Published On 2022-01-25 05:29 GMT   |   Update On 2022-01-25 05:32 GMT
பாடகி லதா மங்கேஷ்கர் உடல்நலம் பற்றி சமூக வலைதளங்களில் வைரலான தகவல்களுக்கு மருத்துவமனை நிர்வாகம் பதில் அளித்தது.


பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் உடலநல பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் கொரோனா தொற்றுக்கு லதா மங்கேஷ்கர் உயிரிழந்துவிட்டதாக கூறும் தகவல் ஃபேஸ்புக்கில் வைரலாகி வருகிறது. வைரல் பதிவுகளை தொடர்ந்து லதா மங்கேஷ்கர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை சார்பில் அவரது உடல்நலம் பற்றிய தகவல் வெளியிடப்பட்டு இருக்கிறது

அதன்படி லதா மங்கேஷ்கர் உயிரிழந்துவிட்டதாக கூறிய தகவல்களில் துளியும்  உண்மையில்லை. அவர் ஐ.சி.யு.-வில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் நலம் தேறி வருகிறது.  மேலும் அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

92-வயதான லதா மங்கேஷ்கர் இந்தியாவின்  மெலோடி குயின் என பிரபலமாக அறியப்படுகிறார். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் லதா மங்கேஷ்கர் உடல்நிலை குறித்து வைரலான தகவலில் உண்மையில்லை என உறுதியாகிவிட்டது.

லதா மங்கேஷ்கருக்கு 2001 ஆம்  ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இதுதவிர பத்ம பூஷன், பத்ம விபூஷன், தாதா சாகேப் பால்வே மற்றும் ஏராளமான தேசிய விருதுகளை இவர் வென்று இருக்கிறார். 
Tags:    

Similar News