உண்மை எது
அரவிந்த் கெஜ்ரிவால்

மீண்டும் வைரலாகும் அரவிந்த் கெஜ்ரிவால் புகைப்படம்

Update: 2022-01-06 05:55 GMT
அரவிந்த் கெஜ்ரிவால் சிறுவனக்கு முகக்கவசம் அணிவிக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவி வருகிறது. ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த மாநில அரசாங்கங்கள் மீண்டும் ஊரடங்கு மற்றும் பல்வேறு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. 

இந்த நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அவரது உதவியாளர் மனிஷ் சிசோதியா ஆகியோர் முகக்கவசம் அணியாமல் நிற்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. புகைப்படத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் சிறுவனுக்கு முகக்கவசம் அணிவிக்கிறார். முன்னதாக இதே புகைப்படம் கடந்த ஆண்டும் இணையத்தில் வைரலானது. தற்போது அரவிந்த் கெஜ்ரிவால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், மீண்டும் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.`அவரே முகக்கவசம் அணியவில்லை, ஆனால் மற்றவர்களை முகக்கவசம் அணிய வைக்கிறார்,' எனும் தலைப்பில் வைரல் புகைப்படம் பகிரப்பட்டு வருகிறது. உண்மையில் இந்த புகைப்படம் நவம்பர் 2019 வாக்கில் எடுக்கப்பட்டது ஆகும். வைரல் புகைப்படம் டெல்லி பள்ளியில் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் சிசோதியா இணைந்து மாணவர்களுக்கு முகக்கவசம் வழங்கிய போது எடுக்கப்பட்டது ஆகும்.

Tags:    

Similar News