என் மலர்
திருவண்ணாமலை
- உரிமையாளரின் மனைவியை தாக்க முயற்சி
- வாக்குவாதம் முற்றியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை வேங்கிக்காலில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனம் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கிளைகளை தொடங்கி பொதுமக்களிடம் சீட்டு நடத்தி பணம் பெற்று வந்தனர்.
நிறுவனத்தில் அதிகப்படியான மக்களை சேர்ப்பதற்காக தையல் பயிற்சி, அழகுகலை பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகள் நடத்தி பெண்களிடம் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தவற்கான ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளனர்.
மேலும் பலரை பல்வேறு மாவட்டங்களில் ஒருங்கிணைப்பா ளர்களாகவும், முகவர்களாகவும் நியமித்து பொதுமக்களிடம் பணத்தை பெற்றுள்ளனர்.
ரூ.50 முதல் ரூ.300 வரை செலுத்தினால் தங்கமூக்குத்தி, அதற்கு மேல் செலுத்தினால் புடவை, ஆடுகள் உள்ளிட்ட வழங்குதவது போன்ற பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளனர்.
அதன்படி முகவர்கள் மூலம் பொதுமக்களிடம் இருந்து அதிகப்படியான பணத்தை பெற்றனர். முகவர்கள் தங்கள் பகுதியை சேர்ந்த ஏராளமானவர்களை இத்திட்டத்தில் சேர்த்து பணத்தை பெற்றனர்.
திடீரென நிதி நிறுவனத்தை நடத்தி வந்த நிர்வாகி தலைமறைவாகி விட்டார். பணத்தை கொடுத்த பொதுமக்களும், வாங்கிக்கொடுத்த முகவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். பணத்தை செலுத்திய பொதுமக்கள் முகவர்களிடம் பணத்தை கேட்டு நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் அந்த நிறுவனத்தை நடத்தி வந்தவரின் மனைவி மற்றும் உறவுக்கார பெண் ஆகியோர் திருவண்ணாமலை உள்ளதாக முகவர்களுக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் நேற்றுமுன்தினம் முகவர்கள் நிறுவன உரிமையாளர் மனைவி மற்றும் உறவுக்கார பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டனர்.
இதனால் அவர்கள் காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு புகார் அளித்தனர். போலீசார் இது தொடர்பாக விசாரணை செய்ய தாலுகா போலீசாருக்கு அறிவுறுத்தினர். அதன்படி போலீசார் விரைந்து சென்று நிதி நிறுவன உரிமையாளரின் மனைவி மற்றும் உறவுக்கார பெண் ஆகியோரை மீட்டு கிரிவலப்பாதையில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.
இந்த தகவல் அறிந்ததும் ஈரோடு, திண்டுக்கல் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து முகவர்கள் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் நிலையம் முன்பு குவிந்தனர்.
அப்போது முகவர்கள் அனைவரும், நிதி நிறுவன உரிமையாளரின் மனைவி மற்றும் உறவுக்கார பெண்ணிடம் பணத்தை திருப்பி தர கேட்டனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
- ரூ.10 லட்சத்தில் சாலை அமைப்பதற்கு நிதி ஒதுக்கப்பட்டது
- அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
போளூர்:
போளூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 12- வது வார்டில் (2022- 2023) எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சத்தில் சிமெண்ட் சாலை அமைப்பதற்கு நிதி ஒதுக்கப்பட்டது.
இந்த சிமெண்ட் சாலையின் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு நேற்று முன்னாள் அமைச்சரும் போளூர் தொகுதி எம்.எல்.ஏ வுமான அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சிமெண்ட் சாலையை திறந்து வைத்தார்.
இதில் மாவட்ட துணை செயலாளர் ஏ.செல்வம், பொதுக்குழு உறுப்பினர் ஏ.ராஜன், போளூர் ஒன்றிய செயலாளர் ஜெயசுதலட்சுமிகந்தன், சேத்துப்பட்டு ஒன்றிய செயலாளர் ஸ்ரீதர், சேத்துப்பட்டு முன்னாள் மாவட்ட கவுன்சிலர் செந்தில்குமார், நகர செயலாளர் பாண்டுரங்கன், இளைஞர் அணி சத்யராஜ் சிவக்குமார் கலந்து கொண்டனர்.
- விவசாய நிலத்தில் பயிர் நடவு செய்து கொண்டிருந்த போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
சேத்துப்பட்டு:
திருவண்ணாமலை, மாவட்டம் சேத்துப்பட்டு, அருகே உள்ள செய்யானந்தல், கிராமத்தை சேர்ந்தவர் விநாயகம், இவரது மனைவி வளர்மதி, (வயது 44). இவர்களுக்கு 2 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். வளர்மதி நேற்று மாலை செய்யானந்தல் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் பயிர் நடவு செய்து கொண்டிருந்தார்.
நேற்று மாலை திடீரென கருமேகம் சூழ இடி மின்னலுடன் மழை பெய்ய ஆரம்பித்தது. அப்போது திடீரென வளர்மதி, மீது மின்னல் தாக்கியது.
அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சேத்துப்பட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் வளர்மதி, ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து தச்சம்பாடி, கிராம நிர்வாக அலுவலர் சேத்துப்பட்டு, போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
சேத்துப்பட்டு போலீசார் உடலை கைப்பற்றி திருவண்ணாமலை, அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து. மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நல்லூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்த பச்சையப்பன் சேகர் வீட்டில் நகை திருட வந்தது தெரிய வந்தது.
- பச்சையப்பன் மீது சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
வந்தவாசி:
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த ஸ்ரீரங்கராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் (வயது 45) விவசாயி. ஆட்டுப்பண்ணை வைத்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு சேகர் மற்றும் குடும்பத்தினர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். கோடை காலம் என்பதால் காற்றுக்காக கதவைத் திறந்து வைத்துள்ளனர்.
இந்நிலையில் நள்ளிரவில் இவர்களது வீட்டிற்குள் வாலிபர் ஒருவர் நைசாக நுழைய முயன்றார். அவரை கண்டதும் வெளியே இருந்த ஆடுகள் கத்தின. சத்தம் கேட்டு சேகர் குடும்பத்தினர் வெளியே வந்தனர். அப்போது பின்பக்கம் வழியாக வாலிபர் உள்ளே புகுந்தார். அவரை கண்டதும் கூச்சலிட்டனர்.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்தனர். அவர்களை கண்டதும் திருட வந்த வாலிபர் தப்பி ஓடினான்.
பொதுமக்கள் அவனை விரட்டி சென்றனர். அப்போது திருடன் அருகில் இருந்த விவசாய கிணற்றில் குதித்தான்.
துரத்திச் சென்ற பொதுமக்கள் கிணற்றில் இருந்த திருடனை மேலே தூக்கினர். மேலும் கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர்.
இதுகுறித்து கீழ்கொடுங்காலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டு இருந்தவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.
அவர் சென்னை புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த பச்சையப்பன் (வயது 42) என்பது தெரியவந்தது.
நல்லூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்த பச்சையப்பன் சேகர் வீட்டில் நகை திருட வந்தது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
பச்சையப்பன் மீது சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
- அர்ஜுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வந்தவாசி:
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த சாலவேடு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ திரவுபதி அம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா முன்னிட்டு அர்ஜுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் நாடக கலைஞர்கள் அர்ஜுனன் வேடம் அணிந்து கொண்டு பாடல்களைப் பாடிக் கொண்டு உயரமான மரத்தில் ஏறி மகாபாரதம் எப்படி நடைபெற்றது என்று தத்துரூபமாக நடித்துக் காண்பித்தனர். இந்த சிறப்புமிக்க அர்ஜுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சியில் வந்தவாசி ஊராட்சி ஒன்றிய துணை சேர்மன் பாபு உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- ஆய்வு கூட்டத்தில் ஆலோசனை
- கள்ளச்சாராயம் விற்பனையை தடுக்க தீவிர நடவடிக்கை
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வு துறை சார்பில் கள்ளச்சாராயம், போலி மது விற்பனை தடை செய்வது தொடர்பாக ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது.
கலெக்டர் பா. முருகேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருவண்ணாமலை சப்-கலெக்டர் மந்தாகினி வரவேற்றார்.
இந்த கூட்டத்தில,' கிராமம் வாரியாக கள்ளச்சாராயம், காய்ச்சும் நபர்களுக்கு தேவையான பொருட்களை தந்து உதவும் நபர்களை குறித்து ஆய்வு செய்து அறிக்கை அனுப்ப வேண்டும். காவல் துறை சார்பில் தொடர்ந்து அனைத்து பகுதிகளிலும் கள்ளச்சாரய தேடுதல் வேட்டை நடத்த வேண்டும்.
கள்ளச்சாராயம் காய்ச்சும் நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு மறுவாழ்வுக்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த தொழிலில் ஈடுபடும் வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவதுறை சார்பில் மறுவாழ்வு மையம் ஏற்படுத்தப்பட உள்ளது.
கள்ளத்தனமாக சாராயம் விற்பது மற்றும் காய்ச்சுவது, போதைப் பொருட்கள் பதுக்குவதை முற்றிலுமாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போலியான மதுபா னங்கள் விற்பனை மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் கீழ் உரிமம் வழங்கப்பட்ட பல்வேறு அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களை ஆய்வு செய்ய வேண்டும்.
இதில் சமூக விரோத செயலில் ஈடுபட்டு, திருந்தி வாழும் நபர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில், வருவாய்த்துறை மற்றும் காவல் துறையினர் வழிவகை செய்ய வேண்டும்.
மேலும் அவர்களுக்கு சுய தொழில் தொடங்க நிதி உதவி, இலவசமாக ஆடு,மாடு வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே குற்ற செயல்களில் ஈடுபடுவதை தடுக்க ஆங்காங்கே சிறப்பு முகாம்கள் நடத்தி மக்களிடையே விழிப்பு ணர்வு ஏற்படுத்துவது தொ டர்பாக கலந்தாலோசனை செய்யப்பட்டது.
இதில், செய்யாறு சப்- கலெக்டர் அனாமிகா, உதவி கலெக்டர் ரஷ்மி ராணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் வெற்றிவேல், சுகா தாரத்துறை துணை இயக்குனர் செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- குடும்ப தகராறில் விரக்தி
- 8 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடந்தது
வந்தவாசி:
வந்தவாசி அடுத்த ஏம்பலம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மகள் பிரியா(வயது 27). இவருக்கும் கல்லாங்குத்து கிராமத்தைச் சேர்ந்த ஜெகதீஷ் என்பவருக்கும் கடந்த 8 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடந்தது. 2 குழந்தைகள் உள்ளனர். கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இதனால் நேற்று முன்தினம் ஜெகதீஷ் பிரியாவை தாய் வீடான ஏம்பலம் கிராமத்தில் விட்டுவிட வந்தார்.
பிரியாவுடன் ஜெகதீஷ் தகராறு செய்து அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனை அடைந்த பிரியா வீட்டின் உள்ளே சென்று புடவையில் தூக்கில் தொங்கினார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் பிரியா இறந்ததாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து சின்னசாமி தெள்ளார் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- 2 குழந்தைகளை தவிக்கவிடு சென்றார்
- போலீசார் விசாரணை
செய்யாறு:
வெம்பாக்கம் அடுத்த புலிவலம் சேர்ந்தவர் முரளி (வயது 25). தொழிலாளி. இவரது மனைவி சினேகா (22). இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர்.
கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சினேகா மன உளைச்சலில் காணப்பட்டார். கடந்த 26 -ந் தேதி இரவு வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். மறுநாள் காலையில் முரளி எழுந்து பார்த்தார்.
அப்போது சினேகா வீட்டில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் அக்கம் பக்கம், உறவினர் வீடுகளில் தேடினார். அவர் கிடைக்காததால் பிரம்மதேசம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சினேகாவை தேடி வருகின்றனர்.
- 200 கிராம் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்
- போலீசார் விசாரணை
வந்தவாசி:
வந்தவாசி அடுத்த தேசூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாய்ராம் தலைமையில் நேற்று முன்தினம் இசாகொளத்தூர் பஸ் ஸ்டாப்பில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகிக்கும் வகையில் நின்றிருந்த 2 பேர் போலீசாரை கண்டதும் ஓட முயன்றனர்.
இதையடுத்து போலீசார் அவர்களை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் தேசூரைச் சேர்ந்த துரைமுருகன்(23), நந்தகுமார்(26) என்பதும், இவர்கள் கஞ்சா கடத்தி வந்ததும் தெரிந்தது.இதனையடுத்து போலீசார் துரைமுருகன், நந்தகுமார் ஆகிய 2 பேரை மீகைது செய்து அவர்களிடமிருந்து 200 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
- அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
- 500-க்கும் மேற்பட்ேடார் பங்கேற்றனர்
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் தாசில்தார் அலுவலகம் எதிரில் திருண்ணாமலை வடக்கு சார்பாக சாராயம், கஞ்சா போதை போன்றவற்றை தடுக்க தவறிய தமிழக அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான தூசி மோகன் தலைமை தாங்கினார்.
ஆரணி எம்.எல்.ஏ சேவூர் ராமச்சந்திரன், நகர மன்ற துணைத் தலைவர் பாரி பாபு ஆகியோர் முன்னிலை வகித்தார். நகர செயலாளர் அசோக் குமார் அனைவரையும் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன் கலந்து கொண்டார்.
ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏக்கள் பன்னீர் செல்வம், பாபு முருகவேல், நளினி மனோகரன், குணசீலன், மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜன், ஒன்றிய செயலாளர்கள் கஜேந்திரன், சங்கர், திருமால், ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் பையூர் சதிஷ், நகர மாணவர் அணி செயலாளர் குமரன் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் 500-க்கும் மேற்பட்ட கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
- சந்தேகத்தின் பேரில் 2 பேரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தண்டராம்பட்டு:
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள தேவனூர் புதூர் கிராமத்தை சேர்ந்தவர் காசி மகன் அருள் என்கிற அருள்குமார் (வயது 37). இவர் அந்த பகுதியில் பணம் வட்டிக்கு விடும் தொழில் செய்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு அருள் திருவண்ணாமலைக்கு வந்தார். பின்னர் பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
இரவு 11 மணிக்கு மணலூர்பேட்டை ரோட்டில் உள்ள தேவனூர் புதூர் அருகே வந்த போது அவரை மர்ம நபர்கள் வழிமறித்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் அருள்குமாரை கத்தி அரிவாளால் வெட்டி சாய்த்தனர். இதில் பலத்த காயமடைந்த அருள்குமார் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த தச்சம்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அருள்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து கொலையாளிகள் குறித்து விசாரணை நடத்தினர்.
சந்தேகத்தின் பேரில் 2 பேரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- 70 மதுபாட்டில்கள், மொபட் பறிமுதல்
- போலீசார் விசாரணை
ஆரணி:
ஆரணியை அடுத்த சதுப்பேரி பகுதியில் டாஸ்மாக் மதுபா னங்களை வீட்டில் பதுக்கி வைத்து அதிகவிலைக்கு விற்பனை செய்து வருவதாக களம்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சத்யா மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது செல்வராஜ் (வயது 60) என்பவரின் வீட்டில் அதிக விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்வது தெரிய வந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து சுமார் 70 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் மது விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட மொபட்டையும் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து களம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வராஜை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.






