உள்ளூர் செய்திகள்

கால்நடை மருத்துவ தரவரிசை பட்டியல்- 31 மாணவர்கள் 200க்கு 200 மதிப்பெண் எடுத்து சாதனை

Published On 2023-07-26 10:26 GMT   |   Update On 2023-07-26 10:26 GMT
  • மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
  • மதுரை-நித்யா 2-வது இடத்தையும், மதுரை-தாமரை செல்வி மற்றும் பெரம்பலூர்-சிவா, ஆகியோர் 3-ம் இடத்தையும் பெற்றனர்.

சென்னை:

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல் கலைக்கழகத்தில் இளநிலை கால்நடை பட்டப்படிப்பு மற்றும் இளநிலை தொழில் நுட்ப பட்டபடிப்புகளுக்கான மாணவர் சேர்கை நடந்து வருகிறது.

22 ஆயிரத்து 535 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர். தகுதி பெற்ற விண்ணப்ப தாரர்களின் தரவரிசை பட்டியல் இன்று இணைய தளத்தின் வழியாக வெளியிடப்பட்டது.

31 மாணவர்கள் 200க்கு 200 மதிப்பெண் பெற்று உள்ளனர். அதில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவர் ராகுல்காந்த், தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த கனிமொழி, தென்காசி-முத்துலட்சுமி, அரியலூர்-நந்தினி, திருப்பத்தூர்-கிரேஸ் கிரிஷ்டி, தர்மபுரி-விஷ்வா, அரியலூர்-வசந்தி, அரியலூர்-சக்திகுமரன் நாமக்கல் -லோபாஷினி, கரூர்-கவுசிகா ஆகிய 10 மாணவ-மாணவிகள் தர வரிசை பட்டியலில் முதல் இடங்களை பிடித்துள்ளனர்.

இளநிலை தொழில் நுட்ப பட்டப்படிப்புகளுக்கான (பி.டெக்) தரவரிசை பட்டியலில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த விஷ்ணுபிரசாத் 200-க்கு 199.50 மதிப்பெண் பெற்று முதல் இடத்தையும், திருவண்ணாமலை மாணவி தர்ஷா (198.50) 2-வது இடத்தையும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த வர்ண ஓவியா (198) மற்றும் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த லோகேஷ்குமார் (198) 3-ம் இடத்தையும் பெற்றனர்.

அரசு பள்ளயில் படித்த மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டு பிரிவில் சேலம்-விக்னேஷ், பெரம்பலூர்-அஜய் ஆகியோர், 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தை பிடித்தனர். திருவண்ணாமலை-பானுபிரியா, மதுரை-நித்யா 2-வது இடத்தையும், மதுரை-தாமரை செல்வி மற்றும் பெரம்பலூர்-சிவா, ஆகியோர் 3-ம் இடத்தையும் பெற்றனர்.

மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும். தற்காலிக தரவரிசை பட்டியல் பற்றி ஏதேனும் விசாரணை இருப்பின் 044-29994348, 29994349 ஆகிய எண்களில் மாணவர்கள் அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News