உள்ளூர் செய்திகள்

திருத்தணி அருகே ஊராட்சி தலைவரை கண்டித்து கிராம மக்கள் மறியல்

Published On 2023-02-14 08:57 GMT   |   Update On 2023-02-14 08:57 GMT
  • இளைஞர் மேம்பாட்டு நிதி ஒரு லட்சத்து 90 ஆயிரத்தை முறையாக பயன்படுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது.
  • இளைஞர் மேம்பாட்டு நிதி ஒரு லட்சத்து 90 ஆயிரத்தை முறையாக பயன்படுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது.

திருத்தணி:

திருத்தணி அடுத்த தும்பிக்குளம் ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் நிர்மலா. இவரது கணவர் கோபி. இந்த கிராமத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தை சீரமைக்க வேண்டும் என்று புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும் இளைஞர் மேம்பாட்டு நிதி ஒரு லட்சத்து 90 ஆயிரத்தை முறையாக பயன்படுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது.

இது குறித்து கிராம மக்கள் ஊராட்சி மன்றத் தலைவர் நிர்மலாவிடம் கேட்டபோது அவர் பதில் அளிக்காமல் அவரது கணவர் கோபி விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது. மேலும் பஸ் வசதி உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து பொதுமக்கள் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் ஊராட்சி தலைவராக உள்ள நிர்மலாவிற்கு பதிலாக அவரது கணவர் கோபி செயல்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளாததை கண்டித்தும் அப்பகுதியை சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்டோர் திருத்தணி-நல்லாட்டூர் சாலையில் இன்று காலை திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் திருத்தணி இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர். இதனால் அப்பகுதி சிறி்து நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

Similar News