உள்ளூர் செய்திகள்

திருத்தணி முருகன் கோவிலில் ரூ.74 லட்சம் உண்டியல் வசூல்

திருத்தணி முருகன் கோவிலில் ரூ.74 லட்சம் உண்டியல் வசூல்- ¾கிலோ தங்கமும் கிடைத்தது

Published On 2022-06-16 10:05 GMT   |   Update On 2022-06-16 10:05 GMT
  • உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணும் பணி மலைக்கோவிலில் உள்ள வசந்த மண்டபத்தில் நடந்தது.
  • 20 நாட்கள் உண்டியல் காணிக்கை மூலம் ரூ. 73 லட்சத்து 63 ஆயிரத்து 674 வருவாயாக கிடைத்தது.

திருத்தணி:

திருத்தணி முருகன்கோவிலில் தரிசனம் செய்ய தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். வைகாசி விசாகம், கிருத்திகை மற்றும் முகூர்த்த காலங்களில் பக்தர்கள் கூட்டம் கோவிலில் அலைமோதியது.

பக்தர்களின் காணிக்கையால் கோவிலில் இருந்த உண்டியல்கள் நிரம்பியது. இதையடுத்து உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணும் பணி மலைக்கோவிலில் உள்ள வசந்த மண்டபத்தில் நடந்தது.

கோவில் துணை ஆணையர், செயல் அலுவலர் விஜயா தலைமையில் உண்டியல் எண்ணும் பணியில் கோவில் அலுவலர்கள் 50-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.

இதில் 20 நாட்கள் உண்டியல் காணிக்கை மூலம் ரூ. 73 லட்சத்து 63 ஆயிரத்து 674 வருவாயாக கிடைத்தது.

மேலும் தங்கம் 3/4 கிலோ தங்கம், வெள்ளி 5கிேலாபும் காணிக்கையாக செலுத்தப்பட்டு இருந்ததாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News