உள்ளூர் செய்திகள்
தூத்துக்குடியில் வாலிபர் வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு
- வீட்டில் இருந்து தண்ணீரை எடுத்து மோட்டார் சைக்கிள் மீது ஊற்றி தீயை அணைத்தார்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி அண்ணா நகர் 6-வது தெருவை சேர்ந்தவர் மகேஷ் பூபதி (வயது 24). இவர் நேற்று இரவு வீட்டின் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு தூங்க சென்றுள்ளார்.
சிறிதுநேரத்தில், வீட்டின் முன்பாக வந்த மர்ம நபர் மகேஷ் பூபதியின் வீட்டின் மீது பெட்ரோல் போன்று திரவம் நிரப்பப்பட்ட பாட்டிலில் தீ பற்ற வைத்து வீசினார்.
அந்த பாட்டில் அவரது மோட்டார் சைக்கிள் மீது பட்டு தீப்பற்றி எரிந்துள்ளது. சத்தம் கேட்டு வீட்டில் இருந்த மகேஷ் பூபதி எழுந்து வெளியே பார்க்கும் போது அவர் மோட்டார் சைக்கிள் எரிந்து கொண்டிருந்தது.
உடனடியாக வீட்டில் இருந்து தண்ணீரை எடுத்து மோட்டார் சைக்கிள் மீது ஊற்றி தீயை அணைத்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜாராம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.