உள்ளூர் செய்திகள்

திண்டிவனம் அருகே வேப்ப மரத்தில் இருந்து பால் வடிந்ததால் பரபரப்பு- பொதுமக்கள் வழிபாடு

Published On 2023-04-02 10:30 GMT   |   Update On 2023-04-02 10:30 GMT
  • வேப்பமரத்திற்கு மஞ்சள், சந்தனம் பூசி, குங்குமம் இட்டு தீபாராதனை காட்டி அக்கிராம மக்கள் பூஜை செய்து வழிபட்டனர்.
  • வேப்ப மரத்தில் இருந்து வடிந்த பாலை மக்கள் ஆர்வமுடன் தண்ணீ பாட்டிலில் பிடித்து செல்கின்றனர்.

திண்டிவனம்:

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஆத்தூர் கிராமத்தில், கோபால் என்பவருக்கு சொந்தமான வேப்பமரத்தில் பால் போன்ற திரவம் இன்று காலை முதல் வெளி வந்தது.

இதனை அறிந்த அப்பகுதி மக்கள் மிகுந்த ஆர்வமுடன் கூட்டம் கூட்டமாக சென்று வேப்பமரத்தில் இருந்து பால் வடிவதை வியப்புடன் கண்டு வருகின்றனர்.

இதையடுத்து அந்த வேப்பமரத்திற்கு மஞ்சள், சந்தனம் பூசி, குங்குமம் இட்டு தீபாராதனை காட்டி அக்கிராம மக்கள் பூஜை செய்து வழிபட்டனர். வேப்ப மரத்தில் இருந்து வடிந்த பாலை அந்தப் பகுதி மக்கள் ஆர்வமுடன் தண்ணீ பாட்டிலில் பிடித்து செல்கின்றனர்.

மேலும் இதனை அறிந்த சுற்றுப்புற கிராமங்களில் இருந்து பொதுமக்கள் சாரை சாரையாக வந்து வேப்பமரத்தை வழிபட்டு, பாலை பிடித்து செல்கின்றனர். இதனால் இப்பகுதியே பரபரப்பாக காணப்படுகிறது. 

Tags:    

Similar News