தூத்துக்குடியில் மர்ம காய்ச்சலுக்கு 6 வயது சிறுமி பலி
- கடந்த சில மாதங்களாக மாவட்டம் முழுவதும் சுகாதார பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் காய்ச்சலுக்கு சிறுமி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- சிறுமி உயிரிழப்பு குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் ராஜபாண்டி நகர் பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமி கடந்த 2 வாரங்களுக்கு முன்பு காய்ச்சலால் அவதிப்பட்டுள்ளார்.
உடனே சிறுமியை மீட்டு அவரது குடும்பத்தினர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி அந்த சிறுமி அங்கு பரிதாபமாக உயிரிழந்தார்.
கடந்த சில மாதங்களாக மாவட்டம் முழுவதும் சுகாதார பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் காய்ச்சலுக்கு சிறுமி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி டீன் சிவக்குமார் நிருபர்களிடம் கூறுகையில், பலியான சிறுமி கடுமையாக காய்ச்சல் பாதிப்பிற்கு பிறகே அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வந்தார். காய்ச்சல் பாதிப்பு முற்றிய நிலையில் இருந்தது. டெங்கு காய்ச்சலால் சிறுமி இறக்கவில்லை என்றார்.