உள்ளூர் செய்திகள்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

Published On 2022-11-15 12:19 IST   |   Update On 2022-11-15 12:19:00 IST
  • ராஜகோபுரம் முன்பாக கிரிவலப் பாதை தூய்மைப்படுத்தும் பணிகளை அமைச்சர் சேகர்பாபு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
  • கோவிலில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு கேட்டறிந்தார்.

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா வருகிற 26-ந்தேதி தொடங்குகிறது. டிசம்பர் 6-ந் தேதி மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

சாமி உற்சவ வாகனங்கள் மற்றும் பஞ்சரதங்கள் சீரமைக்கும் பணி நடக்கிறது.

மேலும் கிரிவலப்பாதையில் தூய்மை பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இன்று காலை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆய்வு செய்தார்.

ராஜகோபுரம் முன்பாக கிரிவலப் பாதை தூய்மைப்படுத்தும் பணிகளை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் கோவிலில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

தொடர்ந்து பரணி தீபம், மகாதீபம் ஏற்றப்படும் போது செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள், பாதுகாப்பு ஏற்பாடு குறித்து அவர் கேட்டறிந்தார்.

அறநிலை துறை முதன்மை செயலாளர் டாக்டர் பி.சந்திரமோகன், ஆணையர் குமரகுருபரன், கலெக்டர் முருகேஷ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், கோவில் இணை ஆணையர் அசோக் குமார், தி.மு.க. மருத்துவ அணி துணை தலைவர் கம்பன், முன்னாள் நகர் மன்ற தலைவர் ஸ்ரீதரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News