உள்ளூர் செய்திகள்

காஞ்சிபுரத்தில் சாலையில் சுற்றிய மாடுகளை பிடித்த மாநகராட்சி ஊழியர்கள்

Published On 2023-08-13 11:42 IST   |   Update On 2023-08-13 11:42:00 IST
  • கால்நடைகளை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து பராமரிப்பு நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
  • உரிமையாளர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

காஞ்சிபுரம் பகுதியில் சாலைகளில் பொது மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாகவும் , அச்சுறுத்தும் வகையிலும் சுற்றி திரிந்த ஏராளமான கால்நடைகளை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து பராமரிப்பு நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

அதன் உரிமையாளர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். அப்போது வட்டாட்சியர் புவனேஸ்வரன், கவுன்சிலர்கள் கார்த்திக், குமரன், சங்கர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News