தமிழ்நாடு

ஆலந்தூர் பகுதியில் பொதுமக்களுக்கு வழங்கும் குடிநீரின் தரம் ஆய்வு

Published On 2022-07-06 08:36 GMT   |   Update On 2022-07-06 10:48 GMT
  • தண்ணீரின் தரம் குறித்து சோதனையிட்டனர்.
  • ராட்சத தண்ணீர் தொட்டிகள் மற்றும் பிளாஸ்டிக் தொட்டிகளில் ஆலந்தூர் மண்டல சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆய்வு.

ஆலந்தூர்:

ஆலந்தூர், ஆதம்பாக்கம், நங்கநல்லூர் பழவந்தாங்கல் ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க அமைக்கப்பட்டு உள்ள ராட்சத தண்ணீர் தொட்டிகள் மற்றும் பிளாஸ்டிக் தொட்டிகளில் ஆலந்தூர் மண்டல சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது தண்ணீரின் தரம் குறித்து சோதனையிட்டனர். மேலும் அதில் சரியான அளவு குளோரின் கலந்து உள்ளதா என்பதையும் அதிகாரிகள் சோதனை செய்து உறுதி படுத்தினர்.

Tags:    

Similar News