உள்ளூர் செய்திகள்

திருவள்ளூர் அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் ஆஸ்பத்திரி ஊழியர் தற்கொலை

Published On 2022-06-14 11:59 IST   |   Update On 2022-06-14 11:59:00 IST
  • திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கம் காலனியைச் சேர்ந்தவர் ஹரிஹரன் (வயது 38).
  • திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை.

திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கம் காலனியைச் சேர்ந்தவர் ஹரிஹரன் (வயது 38). பேரம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ மனையில் எக்ஸ்ரே டெக்னீசினியாக பணிபுரிந்து வருந்தார்.

இவருக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. இதனால் ஹரிஹரன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானார். மேலும் கணவன்- மனைவியிடையேயும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஹரிஹரணை பிரிந்து அவரது மனைவி சென்று விட்டார். குழந்தை இல்லாத ஏக்கத்தாலும், மனைவி பிரிந்து சென்றதாலும் மன உளைச்சலில் இருந்த ஹரிஹரன் வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். மப்பேடு போலீசார் ஹரிஹரன் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News