உள்ளூர் செய்திகள்

காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பெயரை பயன்படுத்தி மோசடி- டிரைவர் கைது

Published On 2023-03-25 12:12 IST   |   Update On 2023-03-25 12:12:00 IST
  • சந்தேகம் அடைந்த கோபிநாத் காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகரிடம் புகார் அளித்தார்.
  • சைபர் கிரைம் போலீசார் விசாரிக்க எஸ்.பி.சுதாகர் உத்தரவிட்டார்.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் காஞ்சி சாலையில் பிரபல பட்டு உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனம் இயங்கி வருகிறது. இதன் உரிமையாளர் கோபி நாத். இவருக்கு ஒருவர் போன் செய்து காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பேசுவதாக கூறினார்.

பின்னர் அதே அழைப்பை வாங்கி மற்றொருவர் பேசினார். அவர், தான் மாவட்ட கலெக்டரின் சிறப்பு உதவியாளர் என்றும் அவசரமாக பணம் தேவைப்படுவதாகவும், வங்கி கணக்கிற்கு ரூ.75 ஆயிரம் பணம் அனுப்புமாறும் கூறி வங்கி கணக்கு எண்ணை அனுப்பினார்.

இதில் சந்தேகம் அடைந்த கோபிநாத் காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகரிடம் புகார் அளித்தார். இதனை சைபர் கிரைம் போலீசார் விசாரிக்க எஸ்.பி.சுதாகர் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் மற்றும் சதீஷ், ஆல்பர்ட் ஜான், ஆசைத்தம்பி குழுவினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த சந்தானம் என்கிற சந்தான பாரதி ஆள் மாறாட்டம் செய்து தொலைபேசியில் பணம் கேட்டது தெரிய வந்தது. அவர் டிரைவர் ஆவார். அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர் வேறு ஒரு வழக்கில் தஞ்சாவூர் சிறையில் தண்டனை அனுபவித்து வருவது தெரியவந்தது. இந்த நிலையில், மீண்டும் அவரை இவ்வழக்கில் போலீசார் கைது செய்தனர்.

சந்தானம் இதே போல் பல்வேறு மாவட்ட கலெக்டர்களின் பெயரை கூறி மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது.

Tags:    

Similar News