உள்ளூர் செய்திகள்

திருநின்றவூர் ஜெயா கலை கல்லூரியில் கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு- முன்னாள் அமைச்சர் வழங்கினார்

Published On 2023-09-12 09:47 GMT   |   Update On 2023-09-12 09:47 GMT
  • போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் டிசம்பர் மாதம் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்வார்கள்.
  • வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

ஆவடி:

திருவள்ளூர் மாவட்ட அளவிலான 26-ம் ஆண்டு கராத்தே போட்டி திருநின்றவூர் ஜெயா கலை கல்லூரியில் இரண்டு நாட்கள் நடைபெற்றது. போட்டியில் திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 700 மாணவ - மாணவிகள் கலந்து கொண்டனர்.

வயது அடிப்படையில் 70- பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது. இறுதி போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

முன்னதாக சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சரும் ஆவடி சட்டமன்ற உறுப்பினருமான சா.மு.நாசர் மற்றும் ஜெயா கல்வி குழும தலைவர் பேராசிரியர் கனகராஜ் ஆகியோர் பங்கேற்று போட்டியை கண்டுகளித்தனர். பின்னர் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் உதவித்தொகை வழங்கினர். மேலும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட சி. ஆர். பி. எப். டி.ஐ.ஜி. எஸ்.ஜெயபாலன், திருவள்ளூர் நீதிமன்ற அரசு வழக்கறிஞர் எஸ்.மூர்த்தி ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் டிசம்பர் மாதம் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்வார்கள்.

மாவட்ட அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டிக்கான ஏற்பாடுகளை கராத்தே தொழில்நுட்ப இயக்குனர் விஜயராகவன், செயலாளர் தக்ஷிணா மூர்த்தி, தலைவர் ராஜா, சேர்மன் லட்சுமி காந்தன், துணை செயலாளர் ஏ. ரமேஷ்குமார், பொருளாளர் தனசேகர், மற்றும் பயிற்சியாளர்கள்,டி. தியாகராஜன், எஸ்.தீபன், டி.ஏமலதா, ஆர்.சித்ரா, சந்தோஷ் குமார் ஆகியோர் செய்து இருந்தனர்.

Tags:    

Similar News