உள்ளூர் செய்திகள்
உயிரிழந்த சகோதரிகள்.
70 வயதிலும் இணைபிரியாத பாசம்- தங்கை இறந்த அதிர்ச்சியில் சகோதரி திடீர் சாவு
- தங்கை இறந்த துக்கத்தில் அக்கா திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- தங்கையின் உடலைப் பார்த்து துக்கம் தாங்காமல் கதறி அழுதார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயக்கம் அடைந்தார்.
செம்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே உள்ள ஆத்தூர் சவேரியார் தெருவை சேர்ந்தவர் சிறுமணி மனைவி அன்னமுத்து (வயது65). கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்ட அவர் உயிரிழந்தார்.
இந்த விஷயம் கேட்டு அவரது சகோதரி அந்தோணியம்மாள் (70) அதிர்ச்சி அடைந்தார். அவரது கணவர் செல்வராஜியுடன் ஆத்தூருக்கு வந்தார்.
அங்கு தங்கையின் உடலைப் பார்த்து துக்கம் தாங்காமல் கதறி அழுதார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயக்கம் அடைந்தார். இதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அந்தோணியம்மாளை சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தங்கை இறந்த துக்கத்தில் அக்கா திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.