உள்ளூர் செய்திகள்

புது வண்ணாரப்பேட்டையில் மாநகராட்சி தொழிலாளியை வெட்டிய 2 ரவுடிகள் கைது

Published On 2023-01-19 16:39 IST   |   Update On 2023-01-19 16:39:00 IST
  • இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் தலைமையில் போலீசார் விரைந்து வந்து 2 வாலிபர்களிடமும் விசாரணை நடத்தினர்.
  • ரவுடிகளான புது வண்ணாரப்பேட்டை ஜீவா நகரை சேர்ந்த சதீஷ், தண்டையார் பேட்டையை சேர்ந்த மோகன் என்பது தெரிந்தது.

ராயபுரம்:

புதுப்பேட்டையை சேர்ந்தவர் வினோத் குமார். இவர் புதுவண்ணாரப்பேட்டை 40-வது வார்டில் கழிவுநீர் அகற்றும் லாரியில் மாநகராட்சி ஒப்பந்த தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர், புதுவண்ணாரப்பேட்டை அம்மனிம்மன் தோட்டம் பகுதியில் கழிவுநீர் அடைப்பை லாரி மூலம் எடுக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் வினோத்திடம் தகராறில் ஈடுபட்டு கத்தியால் வெட்டினர். இதில் வினோத்தின் கையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் 2 வாலிபர்களையும் மடக்கி பிடித்து சரமாரியாக தாக்கினர்.

இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் தலைமையில் போலீசார் விரைந்து வந்து 2 வாலிபர்களிடமும் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் ரவுடிகளான புது வண்ணாரப்பேட்டை ஜீவா நகரை சேர்ந்த சதீஷ், தண்டையார் பேட்டையை சேர்ந்த மோகன் என்பது தெரிந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செயதனர். சதீஷ் மீது அடிதடி, வழிபறி, கொலை முயற்சி, வெடிகுண்டு வீசிய வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News